29-ந்தேதி வெள்ளாடு வளர்ப்பு இலவச பயிற்சி முகாம்


29-ந்தேதி வெள்ளாடு வளர்ப்பு இலவச பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 23 May 2023 6:45 PM GMT (Updated: 23 May 2023 8:20 PM GMT)

வெள்ளாடு வளர்ப்பு இலவச பயிற்சி முகாம் 29-ந்தேதி நடக்கிறது.

பெரம்பலூர்

பெரம்பலூர் புறநகர் செங்குணம் கைகாட்டி எதிர்புறத்தில் அமைந்துள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தின் சார்பில் விஞ்ஞான முறையில் வெள்ளாடு வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் வருகிற 29-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் விஞ்ஞான முறையில் வெள்ளாடு வளர்ப்பு, உயர்ரக இனங்கள் மற்றும் இனப்பெருக்க மேலாண்மை, வெள்ளாடுகளுக்கான தீவன மேலாண்மை, கொட்டகை அமைக்கும் முறை, பராமரிக்கும் முறை மற்றும் நோய் தடுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயிகள், வெள்ளாடுகள் வளர்ப்போர் நேரில் வந்து பதிவு செய்துகொள்ளலாம். அல்லது 93853 07022 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது பெயர், ஊர் விவரங்களை தெரிவித்து பதிவு செய்து கொண்டு பயிற்சியில் பங்கேற்கலாம் என ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.


Next Story