சொகுசு காரில் கடத்திய 297 கிலோ புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் 3 வாலிபர்கள் கைது


சொகுசு காரில் கடத்திய 297 கிலோ புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் 3 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 16 Oct 2022 12:15 AM IST (Updated: 16 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சொகுசு காரில் கடத்திய 297 கிலோ புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி

திருவட்டார்:

திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர், சப்-இன்ஸ்பெக்டர் ராஜாங்க பெருமாள் மற்றும் போலீசார் சாமியார் மடம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மார்த்தாண்டம் ரோட்டில் இருந்து வந்து கொண்டிருந்த கேரள பதிவெண் கொண்ட சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் தடை செய்யப்பட்ட 297 கிலோ புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது தெரிய வந்தது.

அவற்றை திருவனந்தபுரம் நேமம் ஆயில்யம்காவை சேர்ந்த அஸ்ரப் மகன் அன்வர்தீன் (வயது 34), பிறாவச்சம்பவம் அப்துல்ரசீத் மகன் ஹாஜா உசைன் (36), விழிஞ்ஞம் கோட்டப்புறம் ஜோசப் மகன் ஜோஜோ (35) ஆகிய மூன்று பேர் கடத்தி வந்தனர். அவர்களை கைது செய்த போலீசார் 18 மூடைகளில் இருந்த 297 கிலோ புகையிலை பாக்கெட்டுகளையும், காரையும் பறிமுதல் செய்து விசாரித்தனர்.

அப்போது, 'கேரள மாநிலம் திருவனந்தபுரம் பீமா பள்ளி சசி என்பவரிடம் இருந்து புகையிலை பாக்கெட்டுகளை ரசாக் வாங்குவார். அவரிடமிருந்து புகையிலை பாக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு நித்திரவிளையை சேர்ந்த சுனில் என்பவருக்கு கொண்டு வந்தோம்' என்று தெரிவித்தனர்.


Next Story