29,888 மாணவ- மாணவிகள் இன்று பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதுகிறார்கள்


29,888 மாணவ- மாணவிகள் இன்று பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதுகிறார்கள்
x

தஞ்சை மாவட்டத்தில் 225 பள்ளிகளை சேர்ந்த 29 ஆயிரத்து 888 மாணவ, மாணவிகள் இன்று பிளஸ்-2 தேர்வு எழுதுகிறார்கள். பிளஸ்-1 பொதுத்தேர்வினை 26 ஆயிரத்து 804 மாணவ, மாணவிகள் நாளை முதல் எழுதுகிறார்கள்.

தஞ்சாவூர்


தஞ்சை மாவட்டத்தில் 225 பள்ளிகளை சேர்ந்த 29 ஆயிரத்து 888 மாணவ, மாணவிகள் இன்று பிளஸ்-2 தேர்வு எழுதுகிறார்கள். பிளஸ்-1 பொதுத்தேர்வினை 26 ஆயிரத்து 804 மாணவ, மாணவிகள் நாளை முதல் எழுதுகிறார்கள்.

பிளஸ்-2 பொதுத்தேர்வு

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்த தேர்வு அடுத்த மாதம் 3-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வினாத்தாள் ஒவ்வொரு கல்வி மாவட்ட அலுவலகத்திலும் பாதுகாப்பான அறைகளில் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வினை 29 ஆயித்து 888 மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள். அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் பள்ளி என 225 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த தேர்வினை எழுதுகிறார்கள்.

பறக்கும் படைகள்

இதில் மாணவர்கள் 14 ஆயிரத்து 641 பேரும், மாணவிகள் 15 ஆயிரத்து 247 பேரும் தேர்வு எழுதுகிறார்கள். இன்று தமிழ் முதல்தாள் தேர்வு நடைபெறுகிறது. தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுத்தேர்வு இன்று நடைபெறுவதையொட்டி தேர்வு மையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தேர்வு மையங்களில் மாணவர்களின் வரிசை எண் எழுதப்பட்டு உள்ளது. தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. மேலும் தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, தடையில்லா மின்சாரம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

செல்போனுக்கு தடை

தஞ்சை மாவட்டம் முழுவதும் 112 மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வு பணிகளில் பறக்கும் படையினர், கண்காணிப்பாளர்கள், அறை கண்காணிப்பாளர்கள் என சுமார் 2 ஆயிரம் ஆசிரியர்களும், ஆசிரியர் அல்லாத கல்வித்துறை பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தேர்வு எழுத வரும் மாணவர்கள் செல்போன்களை கண்டிப்பாக எடுத்து வரக்கூடாது. தேர்வு எழுத உள்ளவர்கள் அவசியம் ஹால்டிக்கெட்டை எடுத்து வரவேண்டும். மேலும், மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் தெரிவித்தார்.

பிளஸ்-1 பொதுத்தேர்வு

இதே போன்று பிளஸ்-1 பொதுத்தேர்வு நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி ஏப்ரல் 5-ந்தேதி வரை நடைபெறுகிறது. தஞ்சை மாவட்டத்தில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் என 225 பள்ளிகளை சேர்ந்த 26 ஆயிரத்து 804 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். இதில் மாணவர்கள் 10 ஆயிரத்து 716 பேரும், மாணவிகள் 16 ஆயிரத்து 88 பேரும் அடங்குவர்.


Next Story