திசையன்விளையில் 2-ம் நாள் கபடி போட்டி


திசையன்விளையில் 2-ம் நாள் கபடி போட்டி
x

திசையன்விளையில் 2-ம் நாள் கபடி போட்டியை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்

திருநெல்வேலி

திசையன்விளை:

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திசையன்விளை அப்புவிளை வி.எஸ்.ஆர். விளையாட்டு மைதானத்தில் அகில இந்திய அளவில் ஆண், பெண்களுக்கான மின்னொளி கபடி போட்டி நடந்து வருகிறது.

நேற்று இரவு 2-வது நாள் விளையாட்டு போட்டியை சபாநாயகர் அப்பாவு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். அவருக்கு விளையாட்டு வீரர்களை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் அறிமுகம் செய்து வைத்தார்.

ஆண்கள் பிரிவிற்கான முதல் போட்டியில் நாக்பூர் அணியும், சாய் சென்னை அணியும் விளையாடியது. இதில் நாக்பூர் அணி 45 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது. பெண்கள் அணியில் தமிழ்நாடு கோபிசெட்டிபாளையம் அணியும், அரியானா அணியும் விளையாடியது. இதில் கோபிசெட்டிபாளையம் அணி 38 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது. முன்னதாக நேற்று மாலை திசையன்விளை காமராஜர் சிலை முன்பு இருந்து விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. அதை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

போட்டி தொடக்க விழாவில் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, ராதாபுரம் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் அனிதா பிரின்ஸ், தொழில் அதிபர்கள் வி.எஸ்.ஆர்.சுபாஷ், நவ்வலடி சரவணகுமார், அப்புவிளை பஞ்சாயத்து முன்னாள் தலைவர் வி.எஸ்.ஆர்.சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story