2-வது நாளாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்


2-வது நாளாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x

2-வது நாளாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருவாரூர்

19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒன்றிய அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன.

2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

நன்னிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். மாற்றுப்பணியில் உள்ளவர்களை உரிய இடத்தில் பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 19 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி நேற்றுமுன்தினம் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 2-வது நாளாக நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. இதில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் நேரு, ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதனால் ஒன்றிய அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன.

மன்னார்குடி

அதேபோல் மன்னார்குடி ஒன்றியக்குழு அலுவலகத்தில் உள்ள பணியாளர்கள், அலுவலர்கள் 2-ம் நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு வட்ட கிளை தலைவர் இலரா தலைமை தாங்கினார். கிளை செயலாளர் சுந்தர்ராஜ், பொருளாளர் தமிழரசன், மாவட்ட துணைத்தலைவர்கள் மோகன், பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story