புளியங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் 2 வது நாளாகக் காட்டுத்தீப் பரவல்


புளியங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் 2 வது நாளாகக் காட்டுத்தீப் பரவல்
x

புளியங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் 2 வது நாளாகக் பரவி வரும் காட்டித்தீயை வனத்துறையினர் அணைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

தென்காசி


தென்காசி மாவட்டம், புளியங்குடியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை நேற்று திடீரென காட்டு தீ பிடித்தது. இது குறித்து அப்பகுதி விவசாயிகள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் தீயை அணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் காற்று வேகமாக வீசி வருவதால் தீ பரவும் வேகம் மிகவும் அதிகமாகி உள்ளது.இன்று 2 வது நாளாக தொடர்ந்து தீ எரிந்து வருகிறது.

காட்டு தீயில் அரிய வகை மூலிகைகள் மற்றும் தாவரங்கள் எரிந்து நாசமாயின. மூங்கில் மரங்களும், தேங்கு, வேங்கை உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்கள் தீயில் கருகின.

இந்நிலையில் தீயை அணைக்க போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.


Next Story