2-வது நாளாக வனவிலங்குகள் கணக்கெடுப்பு
2-வது நாளாக வனவிலங்குகள் கணக்கெடுப்பு
கோயம்புத்தூர்
வால்பாறை
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி, பொள்ளாச்சி, உலாந்தி ஆகிய 4 வனச்சரக பகுதியில் தென்மேற்கு பருவமழைக்கு முந்தைய வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நேற்று முன்தினம் தொடங்கியது.
வால்பாறை வனப்பகுதியில் வனச்சரகர் வெங்கடேஷ், மானாம்பள்ளி வனப்பகுதியில் வனச்சரகர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் நடக்கிறது. நேற்று 2-வது நாளாக அக்காமலை புல் மேடு பீட் வனப்பகுதியிலும், சேக்கல் முடி வனப்பகுதியிலும் நேரடியாக பார்த்தும், எச்சங்களை வைத்தும் கணக்கெடுக்கப்பட்டது. இன்றுடன்(வியாழக்கிழமை) காவல் எல்லை கணக்கெடுக்கும் பணி நிறைவு பெறுகிறது. அதன்பின்னர் நேர்கோட்டு பாதையில் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது.
Related Tags :
Next Story