2-ம் கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்கள்


2-ம் கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்கள்
x

கரூர் மாவட்டத்தில் 2-ம் கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்கள் நடைபெற்றது.

கரூர்

சிறப்பு சுருக்க திருத்த முகாம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி 1.1.2023-ஐ தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடைந்துள்ள நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், மேலும் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர் நீக்கல், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கும் அடுத்த மாதம் (டிசம்பர்) 8-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெற உத்தரவிட்டுள்ளது. இதற்கான முதற்கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்கள் கடந்த 12-ந்தேதி மற்றும் 13-ந்தேதி நடைபெற்றது.

இதேபோல் 2-ம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்கள் நேற்று கரூர்நகர்மன்ற கோட்டைமேடு உயர்நிலை பள்ளி உள்பட கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற்றது. இந்த முகாமில் 18 வயது பூர்த்தியடைந்துள்ள நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், இடமாற்றம், திருத்தத்திற்கான விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளித்தனர். முகாமில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த வாக்குச்சாவடி நிலை முகவர்கள் உதவிபுரிந்தனர். இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

நொய்யல்

கரூர் மாவட்டம், சேமங்கி அரசு தொடக்கப்பள்ளி, குளத்துப்பாளையம் அரசு தொடக்கப்பள்ளி, வேட்டமங்கலம் அரசு தொடக்கப்பள்ளி, குந்தாணி பாளையம் அரசு தொடக்கப்பள்ளி, குறுக்குச்சாலை அண்ணாநகர்அரசு தொடக்கப்பள்ளி, நொய்யல் ஈ.வே.ரா. பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி, ஓலப்பாளையம் அரசு தொடக்கப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம் நடைபெற்றது.

இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம், மற்றும் பல்வேறு திருத்தங்கள் தொடர்பான படிவங்களை பூர்த்தி செய்து அதனுடன் முகவரி, வயது போன்ற அடையாளத்திற்காக படிப்புச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், ஆதார் ஆகிய நகல்கள் இணைத்து வாக்குச்சாவடி அலுவலரிடம் வழங்கினார்கள்.


Next Story