ஒடிசாவிலிருந்து சென்னை வந்தது 2-வது சிறப்பு ரெயில்...!


ஒடிசாவிலிருந்து சென்னை வந்தது 2-வது சிறப்பு ரெயில்...!
x
தினத்தந்தி 5 Jun 2023 1:46 PM IST (Updated: 5 Jun 2023 3:22 PM IST)
t-max-icont-min-icon

ஒடிசாவிலிருந்து 2-வது சிறப்பு ரெயில் சென்னை வந்தடைந்தது.

சென்னை,

கொல்கத்தாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசா அருகே தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானது. இந்த கோர விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்திருப்பதோடு, பலரும் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், ஒடிசா பத்ராக் ரெயில் நிலையத்திலிருந்து நேற்று மதியம் கிளம்பிய 2-வது சிறப்பு ரெயில் தற்போது சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்தடைந்தது. இதில் 17 பேர் மட்டுமே சென்னை திரும்பியுள்ளனர். சென்னை திரும்பியவர்களில் யாரும் தமிழகர்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சென்னைக்கு வந்து வேலை செய்பவர்கள் என கூறப்படுகிறது. சிறிய காயங்களுடன் வந்த அவர்களுக்கு மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

முதல் சிறப்பு ரெயில் நேற்று அதிகாலை 4.40 மணிக்கு ஒடிசாவில் இருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்தது. அதில் தமிழக பயணிகள் 137 பேர் இருந்தனர்.


Next Story