2-வது வார பூச்சொரிதல் விழா


2-வது வார பூச்சொரிதல் விழா
x

2-வது வார பூச்சொரிதல் விழா நடந்தது.

திருச்சி

சமயபுரம்:

பூச்சொரிதல் விழா

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 2-வது வார பூச்சொரிதல் விழா நேற்று நடைபெற்றது. இதில், திருச்சி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் டிராக்டர்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் படத்தை வைத்து கூடைகளில் பூக்களை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர்.

மேலும், பாதயாத்திரையாகவும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனுக்கு பூக்களை சாற்றி வழிபட்டனர்.

பூக்களை சாற்றி வழிபாடு

சமயபுரம் புதுத்தெரு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அங்குள்ள முத்துமாரியம்மனுக்கு காலை 7 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் செய்தனர். அதைத்தொடர்ந்து 23-வது ஆண்டாக புஷ்ப பல்லக்கில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் படத்தை வைத்து மேளதாளங்கள் முழங்க கடைவீதி, சன்னதி வீதி வழியாக பூக்களை கூடைகளில் ஏந்தியவாறு ஊர்வலமாக சென்று அம்மனுக்கு பூக்களை சாற்றி வழிபட்டனர். இதேபோல் சமயபுரம் அம்பலக்காரதெரு பொதுமக்களின் சார்பாகவும் பூக்கள் கொண்டு செல்லப்பட்டது. விழாவையொட்டி சமயபுரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

1 More update

Next Story