3 பழங்குடியின சிறுவர்கள் அரசு குழந்தைகள் இல்லத்தில் சேர்ப்பு


3 பழங்குடியின சிறுவர்கள் அரசு குழந்தைகள் இல்லத்தில் சேர்ப்பு
x

வீடு எரிந்து சேதமானதை தொடர்ந்து 3 பழங்குடியின சிறுவர்கள் அரசு குழந்தைகள் இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.

ராணிப்பேட்டை

காவேரிப்பாக்கத்தை அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் குமார். பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர். இவருக்கு சுப்பிரமணி (வயது 7), ராஜேஷ் (5), விஜி (4) ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குமார் வசித்து வந்த குடிசை தீ விபத்தில் எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. இதனால் வீடு இல்லாமல் சிறுவர்களை வைத்துக்கொண்டு மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தார். மேலும் அத்திப்பட்டு ஊராட்சி நிர்வாகம் தங்குவதற்கு இடம் கொடுத்து உதவிசெய்து வந்தது.

இந்த நிலையில் நேற்று குமாரின் 3 மகன்களும் ராணிப்பேட்டை சிறுவர்களுக்கான அரசு குழந்தைகள் இல்லத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு புறதொடர்பு பணியாளர் ராஜேஷ்குமார் முன்னிலையில் சேர்க்கப்பட்டனர். அத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் மோகனசுந்தரம், முன்னாள் தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணைய தலைவர் பிசாய் சொன்கார் சாஸ்திரி, இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் கண்ணன், கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story