ஏரலில்பஸ் கண்டக்டரை தாக்கி 3 பேர் கைது
ஏரலில்பஸ் கண்டக்டரை தாக்கி 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஏரல்:
நெல்லையில் இருந்து நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு அரசு பஸ் ஆத்தூருக்கு ெசன்று கொண்டிருந்தது. பஸ்சை பாளையங்கோட்டையை சேர்ந்த இசக்கிநாதன் (வயது 48) ஓட்டி ெசன்றார். நெல்லை சங்கர்நகர் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அங்கமுத்து (50) என்ற கண்டக்டர் இருந்துள்ளார். பஸ் சிவகளை அருகே சென்றபோது, குரங்கணி காடேரியம்மன் கோவில் தெரு குருவாண்டி மகன் மாயாண்டி பஸ் படிக்கட்டியில் பயணம் செய்துள்ளார். இதை கண்டக்டர் அங்கமுத்து கண்டித்து உள்ளே வருமாறு கூறியுள்ளார். இந்த நிலையில் பஸ் இரவு 9 மணிக்கு ஏரல் பஸ் நிலையம் வந்தபோது, மாயாண்டி மற்றும் அவரது நண்பர்கள் ஆறுமுகமங்கலம் கிழக்கு தெருவை சேர்ந்த சந்தனராஜ் மகன் பிரகாஷ், அதே தெருவை சேர்ந்த 17 வயது வாலிபர் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து அங்கமுத்துவை தகாத அடித்து உதைத்தனர். பின்னர் பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமீதா வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 3 பேரையும் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.