பால் வேன் டிரைவரை தாக்கிய 3 பேர் கைது


பால் வேன் டிரைவரை தாக்கிய 3 பேர் கைது
x

பால் வேன் டிரைவரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள கூம்பூரை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் மணிகண்டன் (வயது 24). இவர் அங்குள்ள பால் கம்பெனியில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

இவர் தினமும் கரூர் மாவட்டம், ஈசநத்தம், பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி, சின்னதாராபுரம் ஆகிய பகுதியில் உள்ள விவசாயிகளிடம் பால்களை சேகரித்து கூம்பூரில் உள்ள தனியார் பால் பண்ணைக்கு பால்வேனில் கொண்டு செல்வது வழக்கம். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மணிகண்டன் பால்வேனில் சின்னதாராபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சென்று கொண்டிருந்தபோது, சாலையின் ஓரத்தில் 3 வாலிபர்கள் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தனர். அப்போது மணிகண்டன் பால் வேனின் ஹாரனை அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 3 வாலிபர்களும் மணிகண்டனை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த மணிகண்டன் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், சின்னதாராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து, மணிகண்டனை தாக்கிய சின்னதாராபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாலமுருகன் (29). அதே பகுதியைச் சேர்ந்த கரிகாலன் (28), கார்த்தி (23) ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story