சாலையில் நடனமாடியதை தட்டி கேட்டவர்களை தாக்கிய 3 பேர் கைது


சாலையில் நடனமாடியதை தட்டி கேட்டவர்களை தாக்கிய 3 பேர் கைது
x

வாணியம்பாடியில் சாலையில் நடனமாடியதை தட்டி கேட்டவர்களை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பத்தூர்

வாணியம்பாடியில் கோவில் திருவிழாவின் போது தட்டி கேட்டவர்களை தாக்கிய 3 பேர் கைது.

வாணியம்பாடி நேதாஜி நகர் வடக்கு டேங்க் தெரு மாரியம்மன் கோவில் திருவிழாவில் அதே பகுதியை சேர்ந்த லெனின் (25) அஜித்குமார் (27), சுலைமான் (20) ஆகியோர் குடிபோதையில் சாலையில் நடனமாடி கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக லெனின் தந்தை ராஜா (50) அண்ணன் ஸ்ரீகாந்த் (28) ஆகியோர் ஏன் சாலையில் ஆடுகிறீர்கள் என தட்டி கேட்டனர்.

அப்போது லெனின் மற்றும் அவனது நண்பர்கள் நாங்கள் இப்படித்தான் ஆடுவோம் என கூறி அவர்களை சரமாரியாக தாக்கி உள்ளனர்.

இதில் காயம் அடைந்த ஸ்ரீகாந்த் வாணியம்பாடி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் லெனின், அஜித்குமார், சுலைமான் ஆகிய 3 பேரின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

1 More update

Next Story