தஞ்சை மருத்துவக்கல்லூரி மாணவர்களை தாக்கிய 3 பேர் கைது
தஞ்சை மருத்துவக்கல்லூரி மாணவர்களை தாக்கிய 3 பேர் கைது
தஞ்சை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் கடந்த 3 நாட்களாக கலைவிழா நடந்தது. பாராமெடிக்கல் படித்து வரும் மாணவர் ஒருவர் தனது நண்பர்களுடன் விழாவிற்கு வந்தார். அப்போது பாராமெடிக்கல் மாணவர் மற்றும் அவருடைய நண்பர்களுக்கும், மருத்துவ மாணவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் ஈரோடு மாவட்டம் சலங்கைபாளையம் பகுதியை சேர்ந்த மருத்துவக்கல்லூரி மாணவர் தீபக்குமார் மற்றும் சில மாணவர்கள் காயம் அடைந்தனர். தொடர்ந்து காயம் அடைந்த மாணவர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து அவர் தஞ்சை மருத்துவக்கலூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தாா். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தஞ்சை மானோஜிப்பட்டியை சேர்ந்த அப்பு என்ற ரத்தினகுமார் (வயது 22), விஷ்ணு (22), விஜய் என்ற விஜயகுமார் (29) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி சென்ற பாராமெடிக்கல் மாணவரை வலைவீசி தேடி வருகின்றனர்.