தர்கா உண்டியலை உடைத்து திருடிய 3 பேர் கைது


தர்கா உண்டியலை உடைத்து திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

அன்னவாசல் அருகே காலடிப்பட்டி சத்திரத்தில் முக்கண்ணாமலைப்பட்டியில் தர்கா உள்ளது. இதன் வெளிப்புறத்தில் உண்டியல் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் 3 பேர் ஒரு ஆட்டோவில் தர்கா அருகே சில மணி நேரமாக நின்று கொண்டு இருந்துள்ளனர். பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாததையடுத்து தர்காவில் இருந்த உண்டியலை உடைத்துள்ளனர். இந்தநிலையில் உண்டியலை உடைக்கும் சத்தம்கேட்டு அருகில் இருந்த சுப்பிரமணி, அவரது சகோதரர் முத்து ஆகிய இருவரும் இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். போலீசார் வருவதற்குள் உண்டியலில் இருந்த பணத்தை திருடி கொண்டு மர்மநபர்கள் ஆட்டோவில் தப்ப முயன்றனர். அவர்களை பிடிப்பதற்காக முத்து ஆட்டோவை தடுத்துள்ளார். அப்போது ஆட்டோவை வேகமாக எடுத்தபோது கீழே விழுந்து முத்து கையில் காயம் ஏற்பட்டது. பின்னர் மர்மநபர்கள் 3 பேரும் அங்கிருந்து ஆட்டோவில் புதுக்கோட்டை சாலையில் தப்பி சென்றனர். அதற்குள் அன்னவாசல் போலீசார் ஆட்டோவில் தப்பிய மர்மநபர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் உண்டியலை உடைத்து திருட்டில் ஈடுபட்டவர்கள் திருச்சி பகுதிகளை சேர்ந்த சாநவாஸ் (வயது 30), சேக்முகமது (35), உமர்முக்தர் (36) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story