புகையிலை பொருட்கள் பதுக்கிய 3 பேர் கைது


புகையிலை பொருட்கள் பதுக்கிய 3 பேர் கைது
x

புகையிலை பொருட்கள் பதுக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்..

சிவகங்கை

காரைக்குடி

கல்லல் அக்ரகாரம் பகுதியில் உள்ள மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கல்லல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் அப்பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டார். அப்போது அங்குள்ள ஒரு மளிகைக்கடையில் 15 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அக்கடையின் உரிமையாளர்கள் கென்னடி(வயது 56), அவரது மகன் தனசேகரன்(31), அவர்களுக்கு புகையிலை பொருட்களை வினியோகம் செய்த காரைக்குடி செக்காலை பகுதியை சேர்ந்த மாரியப்பன் (56) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.


Related Tags :
Next Story