தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது


தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது
x

தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

கிருஷ்ணராயபுரம்,

லாலாபேட்டை அருேக பிள்ளபாளையத்தை சேர்ந்தவா் கார்த்திக் (வயது 30). டெக்ஸ்டைல்ஸ் கூலி தொழிலாளி. இவா் சம்பவத்தன்று பிள்ளபாளையம் இரட்டை வாய்க்காலுக்கு குளிக்க நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த பிரேம் (27), கவுதம் (22), நிவாஸ் (22), கவின் ஆகிய 4 பேரும் சேர்ந்து கார்த்திக்கை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திக் சத்தம் போட்டுள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் பிரேம், கவுதம், நிவாஸ் ஆகிய 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து லாலாபேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய கவினை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story