கஞ்சா விற்ற 3 பேர் கைது

கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோயம்புத்தூர்
கோவையை அடுத்த சூலூர் ரங்கநாதபுரம் பகுதியில் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையிலான தனிப்படை போலீசார் ரோந்து சென்ற னர். அப்போது அங்கு கஞ்சா விற்ற சூலூரை சேர்ந்த கார்த்தி (வயது 24) என்பவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர், அதே பகுதியை சேர்ந்த சத்யராஜ் (32) என்பவரிடம் கஞ்சா வாங்கியது தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து சத்யராஜை கைது செய்து 1½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது போல் ½ கிலோ கஞ்சா வைத்திருந்த இருகூரில் வசிக்கும் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த பாபிகான் (33) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story






