கஞ்சா விற்ற 3 பேர் கைது


கஞ்சா விற்ற 3 பேர் கைது
x

கஞ்சா விற்ற 3 பேர் கைது

கன்னியாகுமரி

ராஜாக்கமங்கலம்:

ராஜாக்கமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லூயிஸ் லாரன்ஸ் தலைமையில் போலீசார் நேற்று கார்த்திகை வடலி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த 3 பேர் தப்பி ஓட முயன்றனர். போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்திய போது அவர்கள் பொழிக்கரை சர்ச் தெருவை சேர்ந்த பிரோடெலின் (வயது20), கோணம் குருசடி பகுதியை சேர்ந்த ஆன்றனி பிவின் (20) மற்றும் ராமன்புதூரை சேர்ந்த ஒரு சிறுவன் என்பதும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் எடைபோடும் எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

1 More update

Next Story