மது விற்ற 3 பேர் கைது


மது விற்ற 3 பேர் கைது
x

மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர்

ஜெயங்கொண்டம்

அரியலூர் மாட்டம், ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிலர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ் கான் அப்துல்லாவிற்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் ஆலோசனையின்படி ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமிபிரியா தலைமையிலான போலீசார் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கீழக்குடியிருப்பு, சின்னவளையம், இலையூர், காமராஜ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனையிட்டனர். அப்போது அப்பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த கீழக்குடியிருப்பு கிராமம் வடக்குத் தெருவைச் சேர்ந்த ராஜகுமாரி(வயது 55), சின்னவளையம் மெயின் ரோட்டுத்தெருவைச் சேர்ந்த பழனிமுருகன்(42), இலையூர் கிராமம் காமராஜர் நகரைச் சேர்ந்த ஆறுமுகம்(48) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story