லாட்டரி சீட்டுகள் விற்ற 3 பேர் கைது


லாட்டரி சீட்டுகள் விற்ற 3 பேர் கைது
x

பொள்ளாச்சியில் லாட்டரி சீட்டுகள் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி,

கோவை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பது, கஞ்சா விற்பது மற்றும் ரேஷன் அரிசி கடத்தலை கண்டறிந்து தடுத்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்தநிலையில் நேற்று பொள்ளாச்சி கிழக்கு போலீசார் பஜார் தெருவில் ரோந்து சென்றனர். அப்போது சிலர் கேரள லாட்டரி சீட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதை பார்த்தனர். தொடர்ந்து லாட்டரி சீட்டு விற்ற 3 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் சூளேஸ்வரன்பட்டி அண்ணா தெருவை சேர்ந்த அன்பழகன் (வயது 47), பொள்ளாச்சி குமரன் நகரை சேர்ந்த சாந்தகுமார் (55), குப்புசாமி தெருவை சேர்ந்த நாராயணசாமி (55) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 360 லாட்டரி சீட்டுகள், ரூ.14 ஆயிரத்து 800 பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story