28 கிலோ கஞ்சா கடத்திய 3 பேர் கைது


28 கிலோ கஞ்சா கடத்திய 3 பேர் கைது
x

காந்திபுரம் பஸ்நிலையத்தில் 28 கிலோ கஞ்சா கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்

காந்திபுரம் பஸ்நிலையத்தில் 28 கிலோ கஞ்சா கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

போலீசார் ரோந்து

கோவை மாநகர பகுதியில் கஞ்சா, புகையிலை மற்றும் போதைப்பொருட்கள் கடத்த லை தடுக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் காட்டூர் போலீசார் காந்திபுரம் பஸ்நிலையத்தில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு கையில் பையுடன் ஒருவர் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டு இருந்தார்.

உடனே போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். இதில் அவர், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பிரவீன் (வயது 28) என்பதும் கஞ்சா விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது.

3 பேர் கைது

உடனே அவரை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கோவையில் பதுங்கி இருந்த திண்டுக்கல்லை சேர்ந்த தர்மராஜ் (27), சதீஷ்குமார் (29) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த 3 பேரும் திண்டுக்கல், தேனி பகுதியில் இருந்து கஞ்சாவை கொண்டு வந்து கோவையில் பதுக்கி வைத்து பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்வது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 28 கிலோ கஞ்சா மற்றும் ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story