கஞ்சா கடத்திய 3 பேர் கைது
பழனியில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல்
பழனி அடிவாரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி தலைமையிலான போலீசார், மயிலாடும்பாறை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பாலசமுத்திரம் சாலையில் இருந்து பழனி நோக்கி சந்தேகப்படும்படி மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். போலீசார் அவர்களை மறித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள், பழனி குறவன்பாறை பகுதியை சேர்ந்த சந்துரு (வயது 21), பாலகுமார் (20), காமராஜர்நகரை சேர்ந்த பரதன் (21) என்று தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களது மோட்டார் சைக்கிளை போலீசார் சோதனை செய்தனர். அதில், 1¼ கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கஞ்சா, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story