ஆட்டோவில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது


ஆட்டோவில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது
x
தினத்தந்தி 17 July 2022 5:00 PM GMT (Updated: 17 July 2022 5:01 PM GMT)

நிலக்கோட்ைட அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே அணைப்பட்டியில் திண்டுக்கல் சரக போலீஸ் ஐ.ஜி.யின் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஆட்டோவில் 5 பேர் கொண்ட கும்பல் வந்தது. அந்த கும்பல் போலீசாரை கண்டதும், ஆட்டோவை சாலையில் நிறுத்திவிட்டு தப்பியோட முயன்றனர். உடனே போலீசார், தப்பியோடிய நபர்களை விரட்டிச் சென்றனர். இதில் 3 பேர் சிக்கினர். 2 பேர் தப்பியோடிவிட்டார். பிடிபட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் விராலிமாயன்பட்டியை சேர்ந்த விக்ரமன், பெரியகுளம் தென்கரையை சேர்ந்த கண்ணன், கணபதிபட்டியை சேர்ந்த வெங்கடேஷ் என்பதும், ஆட்டோவில் கஞ்சா கடத்தி சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 3 பேரையும், ஆட்டோ மற்றும் அதில் கடத்தி வந்த 2½ கிலோ கஞ்சா ஆகியவற்றையும் விளாம்பட்டி போலீஸ் நிலையத்தில் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்ரமன் உள்பட 3 பேரை கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்து ஆட்டோ, கஞ்சா பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய சொக்குப்பிள்ளைபட்டியை சேர்ந்த பிரகாஷ், விக்னேஷ் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story