மோட்டார் சைக்கிள்களில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது


மோட்டார் சைக்கிள்களில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது
x

மோட்டார் சைக்கிள்களில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது

மாவட்ட செய்திகள்


மதுரை நகரில் கஞ்சா கடத்தல், விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் தெற்கு துணை கமிஷனர் சாய்பிரனீத் மேற்பார்வையில் எஸ்.எஸ்.காலனி இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையில் தனிப்படை அமைத்துஅந்த பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்தன்று தனிப்படை போலீசார் கோச்சடை-மேலக்கால் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிளில் 3பேர் வந்தனர். அவர்களை போலீசார் நிறுத்தி விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். அதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். அதில் அண்ணாநகர் சதாசிவம் நகரை சேர்ந்த ரிஷிகேஷ்(வயது 23), அண்ணாநகர் பிரசன்னா(23), தாசில்தார் நகர் முகமது அனீஸ்(22) என்பது தெரியவந்தது. போலீசார் அவர்கள் வந்த வண்டியை சோதனை செய்த போது அதில் ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கஞ்சா, மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Related Tags :
Next Story