கஞ்சா கடத்திய 3 பேர் கைது 2 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல்


கஞ்சா கடத்திய 3 பேர் கைது 2 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல்
x

கஞ்சா கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனா். 2 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஈரோடு

கவுந்தப்பாடி அருகே உள்ள விராலி மேடு பகுதியில் கோபி மதுவிலக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் 2 மோட்டார்சைக்கிள்களில் வந்த 3 பேரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையின்போது மோட்டார்சைக்கிளின் பெட்ரோல் டேங் பகுதியில் 3 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து கடத்தியதை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து 3 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், 'அவர்கள் கவுந்தப்பாடியை சேர்ந்த அப்துல் ரகுமான் (வயது 40), காஞ்சிக்கோவிலை சேர்ந்த தர்மராஜ் (30), வேப்பம்பாளையத்தை சேர்ந்த சுரேஷ் (48) ஆகியோர் என்பதும், விற்பனைக்காக மோட்டார்சைக்கிளில் கஞ்சாவை கடத்தி சென்றதும்,' தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சாவை கடத்த பயன்படுத்தப்பட்ட 2 மோட்டார்சைக்கிள்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.


Next Story