பொள்ளாச்சி அருகே மதுபாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது-வேன் பறிமுதல்


பொள்ளாச்சி அருகே  மதுபாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது-வேன் பறிமுதல்
x
தினத்தந்தி 14 Aug 2023 12:30 AM IST (Updated: 14 Aug 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே மதுபாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே மதுபாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

வாகன தணிக்கை

பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையம் பகுதியில் ஒரு டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி அனுமதி இல்லாமல் நான்கு சக்கர வாகனத்தில் மது பாட்டில்களை கொண்டு சென்று சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, பொள்ளாச்சி குஞ்சிபாளையம் பிரிவு பஸ் நிறுத்தம் அருகே போலீசார் வாகன தணிக்கை செய்தனர்.

120 பீர்பாட்டில்கள்

அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 120 பீர்பாட்டில்கள் இருந்தது. இதனை குஞ்சுபாளையம் டாஸ்மாக் கடையில் வாங்கி விற்பனை செய்ய கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து மதுபாட்டில்களை கடத்தியதாக ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்த ராஜ்கிரன் (வயது31), கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த பிரபாகரன் (43), பொள்ளாச்சி கோபாலபுரத்தைச் சேர்ந்த ரஞ்சித் (42) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும், 120 மது பாட்டில்கள், வேன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story