திருடிய 3 பேர் கைது


திருடிய 3 பேர் கைது
x

கோவில் உண்டியலை உடைத்து திருடிய 3 பேர் கைது

தென்காசி

சுரண்டை:

சுரண்டை அருகே சுந்தரபாண்டியபுரத்தில் மாடசாமி கோவில் மற்றும் திருச்சிற்றம்பலத்தில் கெங்கையம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்குள்ள உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் ரூ.5 ஆயிரம் காணிக்கையை திருடிச் சென்று இருப்பதாக சாம்பவர்வடகரை போலீசாருக்கு புகார் வந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சப்-இன்ஸ்பெக்டர் காசி விஸ்வநாதன் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தார். இதற்கிடையில் சுந்தரபாண்டியபுரம் பகுதியைச் சேர்ந்த 3 வாலிபர்கள் அதிக சில்லரை காசுகளை சுந்தரபாண்டியபுரம் பஜார் பகுதியில் பணமாக மாற்ற முயன்றது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் மடக்கி பிடித்து விசாரித்தபோது உண்டியலை உடைத்து காணிக்கையை திருடியதை அறிந்தனர். விசாரணையில், சுந்தரபாண்டியபுரத்தை சேர்ந்த கார்த்திகேயகுமார் (வயது 27) மற்றும் 18 வயது வாலிபர்கள் என தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்து தென்காசி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.



Next Story