திருட்டு வழக்கில் 3 பேர் கைது
சூலூர் பகுதியில் திருட்டு வழக்கில் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து நகை, பணம், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது
கருமத்தம்பட்டி
சூலூர் பகுதியில் திருட்டு வழக்கில் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து நகை, பணம், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
போலீசார் ரோந்து
கோவையை அடுத்த சூலூர் பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் கருமத்தம்பட்டி போலீஸ் துணை சூப் பிரண்டு ஆனந்த் ஆரோக்கியராஜ் மேற்பார்வையில் சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள், சூலூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவத் தன்று இரவு முத்துக்கவுண்டன்புதூர் பகுதியில் சப்- இன்ஸ்பெக் டர் ராஜேந்திர பிரசாத் மற்றும் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
3 பேர் கைது
அப்போது அங்கே சந்தேகப்படும்படியாக நின்ற நபரை போலீசார் விசாரிக்க முயன்றனர். உடனே அவர் தப்பி ஓடி விட்டார். இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை பார்வையிட்டனர். பின்னர் தப்பி ஓடிய நபரை அடையாளம் கண்டு மடக்கி பிடித்து விசாரித்தனர்.
இதில் அவர் சூலூரை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் மருதாச்சலம் (வயது36) என்பதும், அவர், அதே பகுதியை சேர்ந்த மோகன் என்பவரது மகன் சதீஷ்குமார் (37) என்பவருடன் சேர்ந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர்களின் கூட்டாளியான கோவை கோவில்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் நடராஜ் (51) என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 26¾ பவுன் தங்க நகை, ரூ.1 லட்சத்து 3 ஆயிரம் பணம் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நகை, பணம் பறிமுதல்
விசாரணையில், மருதாச்சலம், சதீஷ்குமார், நடராஜ் ஆகிய 3 பேரும் குற்ற சம்வங்களில் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் சூலூர் பகுதியில் 5, செட்டிபாளையத்தில் 1 உள்பட மொத்தம் 9 திருட்டு வழக்குகளில் தொடர்பு உடையவர்கள் என்பது தெரிய வந்தது.
நகை திருட்டு வழக்கில் 3 பேரை கைது செய்த தனிப்படை போலீசார் சந்துரு, முத்துக்கருப்பன், செல்லப்பாண்டி, பழனிக்குமார் ஆகியோரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் பாராட்டினார்.