திருட்டு வழக்கில் 3 பேர் கைது
நெல்லை அருகே திருட்டு வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி
நெல்லை முன்னீர்பள்ளத்தை அடுத்த செங்குளம் ரெயில்வே நிலையம் அருகே உள்ள இடத்தில் ரெயில்வே பணிக்கு தேவையான கேபிள் ஒயர்கள் வைக்கப்பட்டு இருந்தன. இதில் சுமார் ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள கேபிள் ஒயர்களை மர்மநபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து ரெயில்வே இருவழி பாதை பணிக்கான கண்காணிப்பாளர் நம்பிராஜன் முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த திருட்டில் ஈடுபட்ட சுத்தமல்லி பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் அய்யப்பன் (வயது 32), கிருஷ்ணன் மகன் அய்யப்பன் (22) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story