அரசு பஸ் டிரைவரை தாக்கிய 3 சிறுவர்கள் கைது


அரசு பஸ் டிரைவரை தாக்கிய 3 சிறுவர்கள் கைது
x

அரசு பஸ் டிரைவரை தாக்கிய 3 சிறுவர்கள் கைது செகய்யப்பட்டனர்.

திருச்சி

ஸ்ரீரங்கம் அம்மாபேட்டை அண்ணா நகரை சேர்ந்தவர் திருமுருகன் (வயது 43). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து துவாக்குடி நோக்கி அரசு டவுன் பஸ்சை ஓட்டி சென்றார். பஸ் மேலபுலிவார்டு ரோட்டில் உள்ள தேவர் ஹால் அருகே வந்தபோது 4 சிறுவர்கள் படிக்கட்டில் நின்று பயணம் செய்துள்ளனர். படிக்கட்டில் நிற்க வேண்டாம் என்று டிரைவரும், கண்டக்டரும் அவர்களிடம் கூறியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த அந்த 4 சிறுவர்களும் கீழே இறங்கி கல்லை எடுத்து டிரைவரை தாக்கி உள்ளனர். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 சிறுவர்களை கைது செய்தனர்.

1 More update

Next Story