லாரி டிரைவரை தாக்கிய 3 சிறுவர்கள் கைது
லாரி டிரைவரை தாக்கிய 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கரூர்
கரூர் மாவட்டம், மாயனூரை சேர்ந்தவர் வெங்கடாஜலம் (வயது 49). லாரி டிரைவர். இவர் சம்பவத்தன்று லாரியை எடுத்துக் கொண்டு வடக்கு பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது லாரிக்கு பின்னால் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 சிறுவர்கள் திடீரென லாரியை முந்தி சென்று மோட்டார் சைக்கிளை நிறுத்தினர். பின்னர் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி வந்த அவர்கள் வெங்கடாஜலத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தகாதவார்த்தைகளால் திட்டி தாக்கினர்.
மேலும் லாரியின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து 3 சிறுவர்களும் தப்பி சென்று விட்டனர். இதில் காயம் அடைந்த வெங்கடாஜலம் கொடுத்த புகாரின்பேரில், பசுபதிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆர்த்தி வழக்குப்பதிந்து 3 சிறுவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.
Related Tags :
Next Story