கல்லூரி மாணவியிடம் செல்போன் பறித்த 3 சிறுவர்கள் கைது
கல்லூரி மாணவியிடம் செல்போன் பறித்த 3 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.
கரூர்
நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே உள்ள எல்லைக்காட்டு புதூரை சேர்ந்தவர் நந்தினி(வயது 20). இவர் கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று இவர் கரூர் திருக்காம்புலியூர் பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த பசுபதி பாளையத்தை சேர்ந்த 14, 13, 17 வயதுடைய 3 சிறுவர்கள் சேர்ந்து நந்தினி வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து நந்தினி கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விதுன்குமார் வழக்குப்பதிவு செய்து சிறுவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story