3 தனியார் உரக்கடைகளின் விற்பனை உரிமம் ரத்து


3 தனியார் உரக்கடைகளின் விற்பனை உரிமம் ரத்து
x

அதிக விலைக்கு உரம் விற்ற 3 தனியார் உரக்கடைகளின் விற்பனை உரிமம் ரத்து செய்யப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு யூரியா உரத்தை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக வந்த புகாரை அடுத்து கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வேளாண்மை துறையின் மூலம் சிறப்பு பறக்கும் படை அமைத்து தொடர் கண்காணிப்பில் ஈடுபட உத்தரவிட்டார். அதன்படி வேளாண்மை இணை இயக்குனர் கருணாநிதி தலைமையில் சிறப்பு பறக்கும் படை அமைத்து சோதனையில் ஈடுபட்டனர். வேளாண்மை உதவி இயக்குனர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) மற்றும் வேப்பந்தட்டை வட்டார வேளாண்மை அலுவலர்கள் வேப்பந்தட்டை வட்டாரத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டதில் 3 தனியார் உரக்கடைகளில் அதிக விலைக்கு உரம் விற்பனை செய்வதை கண்டுபிடித்தனர். பின்னர் அவர்கள் அந்த கடைகளின் விற்பனை முடக்கம் மற்றும் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டனர்.


Next Story