அடுத்தடுத்து 3 கார்கள் மோதல்
வேலூர் வள்ளலாரில்அடுத்தடுத்து 3 கார்கள் மோதியதில் 5 பேர் காயம் அடைந்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து வேலூர் வழியாக சென்னையை நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. நேற்று காலை 8.30 மணியளவில் வேலூர் வள்ளலார் பகுதியில் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது முன்னால் சென்ற கார் மீது மோதியது. இதில் முன்னால் சென்ற கார் சாலையின் தடுப்பு கம்பிகளை உடைத்தபடி மறுபுறம் சென்றது. அப்போது சென்னையில் இருந்து வேலூரை நோக்கி வந்த கார் ஒன்று அந்த கார் மீது மீண்டும் மோதியது. இந்த விபத்தில் 3 கார்களின் முன்பகுதிகள் நொறுங்கின. கார்களில் பயணம் செய்த 5 பேர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர்தப்பினர்.
அவர்களுக்கு அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்த சத்துவாச்சாரி போலீசார் அங்கு சென்று போக்குவரத்து நெரிசலை சரிசெய்து, கார்களை அப்புறப்படுத்தினர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து 3 கார்கள் மோதியதால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.