3 குடிசை வீடுகள் தீயில் எரிந்து நாசம்


3 குடிசை வீடுகள் தீயில் எரிந்து நாசம்
x

3 குடிசை வீடுகள் தீயில் எரிந்து நாசம்

திருவாரூர்

நீடாமங்கலம் அருகே 3 குடிசை வீடுகள் தீயில் எரிந்து நாசமாகின. இந்த விபத்தில் ரூ.2 லட்சம் பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.

3 குடிசை வீடுகள்

நீடாமங்கலம் அருகே முன்னாவல்கோட்டை ஊராட்சி கிருஷ்ணாபுரம் காலனி தெருவை சேர்ந்த சத்தியராஜ், பாக்கியராஜ், மணியன் மனைவி செல்லம்மாள் ஆகிய 3 பேரின் குடிசை வீடுகள் அருகருகே உள்ளன. இவர்கள் 3 பேரும் வயல் வேலைக்கு சென்றுவிட்டனர். நேற்று மாலை 3.45 மணியளவில் திடீரென ஒரு குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ மளமளவென அருகில் உள்ள 2 பேரின் குடிசை வீடுகளுக்கும் பரவியது.

ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்

தகவலறிந்த நீடாமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஆனாலும் இந்த தீவிபத்தில் வீட்டில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள ஆவணங்கள், பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமானது.

தகவலின் பேரில் நீடாமங்கலம் தாசில்தார் பரஞ்ஜோதி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி, தலா ரூ.5 ஆயிரம், வேட்டி- புடவை, அரிசி, மண்எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை நிவாரணமாக வழங்கினர். தீ விபத்திற்கான காரணம் குறித்து நீடாமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story