அறுந்து விழுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 3 மாடுகள் செத்தன


அறுந்து விழுந்து கிடந்த    மின்கம்பியை மிதித்த 3 மாடுகள் செத்தன
x

அறுந்து விழுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 3 மாடுகள் செத்தன.

விழுப்புரம்


திருவெண்ணெய்நல்லுார்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பொய்கைய அரசூர் கிராமத்தை சேர்ந்தவர் மண்ணாங்கட்டி மகன் மணிகண்டன் (வயது 34). தொழிலாளி. இவர் 15 பசுமாடுகளை வளர்த்து வருகிறார்.

தினசரி மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி செல்வார். அந்த வகையில் இன்று மதியம் பொய்கைய அரசூர் கிராமத்தையொட்டி உள்ள நில பகுதிக்கு மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றார். அப்போது, அந்த பகுதியில் அறுந்து விழுந்து கிடந்த மின்கம்பியை 3 பசுமாடுகள் மிதித்தன. இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே 3 மாடுகள் இறந்துவிட்டன. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story