உடையார்பாளையத்தில் ரூ.3¼ கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்
உடையார்பாளையத்தில் ரூ.3¼ கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்றது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் உடையார்பாளையம் பேரூராட்சி சந்தையில் ரூ.2 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் உடையார்பாளையம் 3, 5, 6, 15 ஆகிய வார்டுகளில், தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.55½ லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணியை ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்தார்.
இந்தநிகழ்ச்சியில் உடையார்பாளையம் பேரூராட்சி தலைவர் மலர்விழி ரஞ்சித்குமார், துணைத்தலைவர் அக்பர் அலி, செயல் அலுவலர் கோமதி, இளநிலை பொறியாளர் பூசாமி மற்றும் பேரூர் மன்ற உறுப்பினர்கள், பேரூர் கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story