ரூ.3 கோடியில் சாலை விரிவாக்க பணி


ரூ.3 கோடியில் சாலை விரிவாக்க பணி
x

நெல்லை புதிய பஸ் நிலையம் அருகில் ரூ.3 கோடியில் சாலை விரிவாக்க பணி தொடங்கியது.

திருநெல்வேலி

நெல்லை புதிய பஸ் நிலையத்தின் முன்பகுதியில் திருவனந்தபுரம் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் வேய்ந்தான்குளம் அருகில் பெருமாள்புரம் விலக்கில் இருந்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளி ரவுண்டானா வரை 700 மீட்டர் தூரம் சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. தற்போது 15 மீட்டர் அகலம் உள்ள இந்த சாலை, இருபுறமும் தலா 3 மீட்டர் வீதம், மொத்தம் 21 மீட்டராக அகலப்படுத்தப்படுகிறது. மேலும் புதிய பஸ் நிலையத்தின் 2 நுழைவுவாசல் பகுதியிலும் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்படுகிறது. இதற்காக நெடுஞ்சாலைத்துறை மூலம் ரூ.3 கோடியே 10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த சாலை விரிவாக்க பணிக்கான தொடக்க விழா நேற்று நடைபெற்றது. அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மண்டல தலைவர்கள் பிரான்சிஸ், கதீஜா இக்லாம் பாசிலா, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சேகர், உதவி பொறியாளர் சண்முகநாதன், சாலை ஆய்வாளர் யாக்கோபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story