ரூ.3 கோடியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி


ரூ.3 கோடியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி
x
தினத்தந்தி 1 Sep 2023 11:45 PM GMT (Updated: 1 Sep 2023 11:45 PM GMT)

வால்பாறை நகருக்கு குடிநீர் வழங்க ரூ.3 கோடியில் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது.

கோயம்புத்தூர்


வால்பாறை

வால்பாறை நகருக்கு குடிநீர் வழங்க ரூ.3 கோடியில் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது.

குடிநீர் குழாய்கள்

வால்பாறை நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இங்கு நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் ஆதாரமாக கருமலை எஸ்டேட் பகுதியில் உள்ள அக்காமலை தடுப்பணை உள்ளது. அங்கிருந்து பொதுமக்கள், வணிக நிறுவனங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தடுப்பணையில் இருந்து 8 கி.மீ. தொலைவிற்கு குழாய்கள் பதித்து கூட்டுறவு காலனி பகுதியில் உள்ள நகராட்சி குடிநீர்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.

பின்னர் அங்கிருந்து வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. வால்பாறை நகர் பகுதியில் 116 பொது குழாய்கள், 1,697 தனி நபர் வீடு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அக்காமலை தடுப்பணையில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு, 40 ஆண்டுகளாகி விட்டதால் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் அவ்வப்போது குடிநீர் வீணாகி வந்தது.

பதிக்கும் பணி

இதைத்தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.3 கோடி மதிப்பில் புதிதாக குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. அக்காமலை தடுப்பணையில் இருந்து கருமலை தேயிலை தொழிற்சாலை வரை குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளது. பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு குழாய் பதிக்கப்படுகிறது.ொடர்ந்து வால்பாறை கருமலை சாலையோரத்தில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் உடைப்பு ஏற்படாமலும், தடைபடாமலும் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.



Next Story