ரூ.3¾ கோடியில் 587 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


ரூ.3¾ கோடியில் 587 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
x

கூடலூரில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் ரூ.3.73 கோடி மதிப்பில் 587 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அம்ரித் வழங்கினார்.

நீலகிரி

ஊட்டி,

கூடலூரில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் ரூ.3.73 கோடி மதிப்பில் 587 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அம்ரித் வழங்கினார்.

மக்கள் தொடர்பு முகாம்

கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி, 587 பயனாளிகளுக்கு ரூ.3.73 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முகாமில் பொதுமக்களிடம் இருந்து 176 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதில் 156 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 20 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன. முகாமில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-

இதற்கு முன்பு பொதுமக்கள் அரசு அலுவலகங்களை தேடி அலையும் நிலை இருந்தது. தற்போது அனைத்து திட்டங்களும் மக்களை தேடி வீடுகளுக்கே வந்து கொண்டு இருக்கிறது. நீலகிரியில் மகளிர் திட்டம் சார்பில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.350 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

பல்வேறு திட்டங்கள்

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், 29 அரசு உண்டு உறைவிடப்பள்ளிகளில் உள்ள பழங்குடியின மாணவர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வசதிகளும், வேளாண் பொறியியல் துறை சார்பில் மானியத்துடன் கூடிய சோலார் மின்வேலி அமைக்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

முகாமில் வருவாய்த்துறை சார்பில் 112 பயனாளிகளுக்கு ரூ.63 லட்சம் மதிப்பில் விபத்து நிவாரண நிதி, 90 பயனாளிகளுக்கு சாதி சான்றிதழ் மற்றும் 3 பயனாளிகளுக்கு ஆதரவற்ற விதவை சான்றிதழ்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.34 ஆயிரம் மதிப்பில் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரம் மற்றும் மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணை, மாவட்ட சமூக நலத்துறை சார்பில் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 9 குடும்பங்களை சார்ந்த 18 குழந்தைகளுக்கு ரூ.4.50 லட்சம் மதிப்பில் வைப்புத்தொகை பத்திரம் ஆகியவற்றை கலெக்டர் அம்ரித் வழங்கினார்.

பொது நிவாரண நிதி

இதேபோல் மகளிர் திட்டம் சார்பில் 28 சுய உதவிக்குழுவினருக்கு ரூ.93 லட்சம் மதிப்பில் கடனுதவி, மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 22 பயனாளிகளுக்கு ரூ.1.63 கோடி மதிப்பில் தொழில் முனைவோருக்கான கடனுதவி, சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில் 9 பயனாளிகளுக்கு ரூ.4.50 லட்சம் மதிப்பில் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ் கல்வி உதவித்தொகை மற்றும் 100 பயனாளிகளுக்கு ரூ.1 இலட்சம் மதிப்பில் முதியோர் மற்றும் பிற உதவித்தொகைக்கான ஆணை உள்பட மொத்தம் 587 பயனாளிகளுக்கு ரூ.3.73 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முகாமில் கூடலூர் ஆர்.டி.ஓ. சரவணக்கண்ணன், டேன்டீ பொது மேலாளர் ஜெயராஜ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story