கோவை குற்றாலத்தில் ரூ.3 கோடியில் பணிகள்


கோவை குற்றாலத்தில் ரூ.3 கோடியில் பணிகள்
x
தினத்தந்தி 3 Dec 2022 12:15 AM IST (Updated: 3 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவை குற்றாலத்தில் ரூ.3 கோடியில் பணிகள் செய்ய உள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.

கோயம்புத்தூர்


சாடிவயல்

கோவை குற்றாலத்தில் ரூ.3 கோடியில் பணிகள் செய்ய உள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.

கோவை குற்றாலம்

கோவை குற்றாலம் அருவிக்கு கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கை யில் வருகிறார்கள். இதுகுறித்து கோவை மாவட்ட வன அதிகாரி அசோக்குமார் கூறியதாவது:-

கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிக ரிக்க ரூ.3 கோடியில் பணிகள் செய்ய அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இதில், கார் நிறுத்துமிடம் அருகே குழந்தைகளுக்கான நிழற்கூரை, நடைபாதை ஆகியவற்றை சீரமைக்கப்பட உள்ளது. சாடிவயல் அருகே உள்ள 2 மர வீடுகள் மற்றும் ஓய்வு விடுதியை வனத் துறையினர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுலா பயணிகளுக்காக திறந்து வைத்தனர்.

அது சீரமைக்கப்பட்ட பிறகு சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

சேதமடைந்த தொங்கு பாலமும் சீரமைக்கப்படும். மழைக்காலத்தில் நிலச்சரிவு ஏற்படாமல் இருக்க கண்காணிப்பு கோபுரம் அருகே தடுப்புசுவர் அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

சுற்றுலா

கோவை மண்டல வனபாதுகாவலர் ராமசுப்பிரமணியம் கூறுகை யில், கோவை குற்றாலத்தில் வண்ணத்துப்பூச்சிகள், பறவைகள், சிறுத்தைகள் யானைகள் அதிகம் உள்ளன. எனவே அதை பல்லு யிர் பாரம்பரிய தளமாக அறிவிக்க திட்டமிட்டு உள்ளோம்.

மேலும் சூழல் சுற்றுலாவை அதிகரிக்கும் திட்டம் உள்ளது. அதற்கு உதவ சுற்றுலாத்துறையும் ஒப்புக்கொண்டுள்ளது என்றார்.


Next Story