கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க 3 நாள் சிறப்பு முகாம்


கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க 3 நாள் சிறப்பு முகாம்
x

திருப்பத்தூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க 3 நாள் சிறப்பு முகாம் நடைபெறுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர்

மாற்றுத்திறனாளி ஓய்வூதியம் மற்றும் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதன்படி ஏற்கனவே நடைபெற்ற முகாம்களிலேயே இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 20-ந் தேதி வரை 3 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைப்பெறும்.

வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும், இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

இதுவரை விண்ணப்பங்கள் பெறாத விண்ணப்பதாரர்கள் சிறப்பு முகாம் நடைபெறும் நாளன்று முகாமிற்கு வருகை புரிந்து விண்ணப்பங்கள் பெற்று விண்ணப்பிக்கலாம்.

இந்த தகவலை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.


Next Story