அல்-உம்மா இயக்க தலைவர் பாஷாவிற்கு 3 நாட்கள் பரோல்


அல்-உம்மா இயக்க தலைவர் பாஷாவிற்கு 3 நாட்கள் பரோல்
x
தினத்தந்தி 2 Sept 2023 12:30 AM IST (Updated: 2 Sept 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

அல்-உம்மா இயக்க தலைவர் பாஷாவிற்கு 3 நாட்கள் பரோல்

கோயம்புத்தூர்

கோவை

கோவை மாநகரில் கடந்த 1998-ம் ஆண்டு பல இடங்களில் குண்டு வெடித்தது. இதில் 58 பேர் பலியானதுடன், ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு வழக்கில் அல்-உம்மா இயக்க தலைவரான கோவை உக்கடத்தை சேர்ந்த பாஷா (வயது 83) உள்பட பலருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இவர்கள் கோவை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் அல்-உம்மா இயக்க தலைவர் பாஷா தனது உடல் நலத்தை காரணம் காட்டி பரோலுக்கு விண்ணப்பித்து இருந்தார்.

அதன்பேரில் அவருக்கு 3 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. இதையடுத்து பாஷா பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மத்திய சிறையில் இருந்து உக்கடத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



Next Story