3 வீடுகளில் தீ; நகை, பணம், இருசக்கர வாகனங்கள் நாசம்


3 வீடுகளில் தீ; நகை, பணம், இருசக்கர வாகனங்கள் நாசம்
x

3 வீடுகளில் தீப்பற்றி எரிந்ததில் நகை, பணம், இருசக்கர வாகனங்கள் நாசமடைந்தன.

அரியலூர்

ஆண்டிமடம்:

வீடுகள் தீப்பற்றி எரிந்தன

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள தஞ்சாவூரான் சாவடி கிராமத்தில் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த சுப்பிரமணியனின் மனைவி வீரம்மாள். இவர்களது மகன்கள் இளையராஜா, பசுபதி. இவர்கள் அப்பகுதியில் தனித்தனியே உள்ள வீடுகளில் வசித்து வருகின்றனர். நேற்று அவர்கள் அனைவரும் கூலி வேலைக்கு சென்றிருந்தனர்.

இந்நிலையில் ஒரு கூரை வீட்டில் தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. மளமளவென அருகில் இருந்த 2 வீடுகளுக்கும் தீ பரவியது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமுட்டம் தீயணைப்பு துறையினர், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

நகை-பணம் நாசம்

இதில் 2 கூரை வீடுகள் உள்ளிட்ட 3 வீடுகளும் எரிந்து சேதமடைந்தது. மேலும் வீடுகளில் இருந்த 3 பவுன் நகை, 2 இருசக்கர வாகனங்கள், ரூ.20 ஆயிரம் உள்ளிட்டவை எரிந்து நாசமானது. இச்சம்பவம் குறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு க.சொ.க.கண்ணன் எம்.எல்.ஏ. சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அவர்களுக்கு அரசு சார்பாகவும், அவரது சார்பாகவும் நிதியுதவி வழங்கப்பட்டது. அப்போது அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story