சேலத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்
சேலத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.
சேலம்
சேலம் டவுன் மகளிர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தவர் சப்-இன்ஸ்பெக்டர் மேனகா. இதே போன்று அங்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக சுமதி, ஏட்டு அம்சவள்ளி ஆகியோர் பணியாற்றினர். இந்த நிலையில் 3 பேரையும் ஆயுதப்படைக்கு மாற்றி போலீஸ் கமிஷனர் நஜ்மல்ஹோடா உத்தரவிட்டு உள்ளார்.
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும் போது, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு காதல் ஜோடி மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தது. அப்போது அவர்களது பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து உள்ளனர். இதற்காக அவர்கள் காதல் ஜோடியின் பெற்றோரிடம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து 3 பேரும் பணி இடமாற்றப்பட்டு உள்ளனர் என்று கூறினர்.
Related Tags :
Next Story