ஏளூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 3 பேர் காயம்


ஏளூர் அருகே  மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 3 பேர் காயம்
x

ஏளூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 3 பேர் காயம்

நாமக்கல்

ஏளூர் அருகே உள்ள பெரும்பாலிப்பட்டியை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 44). கூலித்தொழிலாளி. இவருடைய மகள் பிருந்தா (15). இவர் அப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் தந்தை, மகள் மோட்டார்சைக்கிளில் ஏளூரில் இருந்து வேலகவுண்டம்பட்டிக்கு சென்றர். அப்போது பெரும்பாலிப்பட்டி முனியப்பன் கோவில் அருகே சென்றபோது, எதிரே வந்த மற்றொரு மோட்டார்சைக்கிள் சாமிநாதன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மாணவி பிருந்தா, சாமிநாதன் ஆகியோர் காயம் அடைந்தனர். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த வையப்பமலை அருகே உள்ள முனியப்பன் பாளையத்தை சேர்ந்த சுகுமார் என்பவரும் (20) காயம் அடைந்தார்.

பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் தந்தை, மகள் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். அதைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் கூலித்தொழிலாளி சுகுமார் சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story