ரெயிலில் கடத்திய 3 கிலோ கஞ்சா பறிமுதல்


ரெயிலில் கடத்திய 3 கிலோ கஞ்சா பறிமுதல்
x

ஜோலார்பேட்டையில் ரெயிலில் கடத்திய 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூர்

மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா ரெயில் நிலையத்தில் இருந்து கர்நாடக மாநில எஸ்வந்த்பூர் வரை செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருப்பத்தூர் மாவட்டம் விண்ணமங்கலம்- ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் ரெயில்வே போலீசார் சோதனை செய்தனர். அப்போது பொது பெட்டியில் பயணிகளின் உடமைகள் வைக்கும் ரேக்கில் கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்ததில் அதில் 3 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

அதனைபறிமுதல் செய்த போலீசார், இதுகுறித்து பயணிகளிடம் விசாரணை செய்தனர். அதில் கஞ்சாவை கடத்திவந்தது யார் என்பது தெரியவில்லை.

இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story