ரூ.3 லட்சம் அரசு நிதி ஒதுக்கீடு


ரூ.3 லட்சம் அரசு நிதி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 5 May 2023 12:15 AM IST (Updated: 5 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தமிழக- கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோவில் திருவிழாவுக்கு ரூ.3 லட்சம் அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேனி

தமிழக-கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோவிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நடந்து வரும் இந்த திருவிழாவுக்கான செலவினங்களை மங்கலதேவி கண்ணகி கோவில் அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர். அரசு இந்த கோவில் திருவிழாவுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். மக்களின் கோரிக்கையை ஏற்று, இந்த ஆண்டு திருவிழாவுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.3 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை இந்து சமய அறநிலையத்துறை ஆணையரும், முன்னாள் தேனி மாவட்ட கலெக்டருமான முரளிதரன் பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில், கண்ணகி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் உணவு அருந்துவதற்கான இடவசதி ஆகியவற்றை ஏற்படுத்திக் கொடுக்க வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் உபரி நிதியில் இருந்து ரூ.3 லட்சத்தை நிதிமாற்றம் செய்து பயன்படுத்த அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள

1 More update

Related Tags :
Next Story